ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் ஊடாக, ஷரியா சட்டம் மற்றும் அதனைப் போதிக்கும் நிறுவனங்களுக்கும் தாக்குதலில் பங்கிருக்கின்றமை தெளிவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
மட்டக்களப்பு கம்பஸினை அரசு பொறுப்பேற்பதற்கான அழுத்தம் வழங்குமாறு கோருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன நேற்றைய தினம் கார்டினலை சந்தித்த போதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தேசிய நாளிதழொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் திருப்தியடையும் வகையில் இல்லையெனவும் கார்டினல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.