இன்று (21) முதல் தமது நாட்டில் இருந்து வௌியேறும் எந்தவொரு இலங்கையரும் சுய தனிமைப்படுத்தல் இன்றி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தல் இன்றி தமது நாட்டிற்கு பிரவேசிக்கக்கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஐக்கிய இராச்சியம் உள்ளடக்கியுள்ளது.
அதன்படி, அந்நாட்டு நேரத்தின் படி இன்று அதிகாலை 4 மணி முதல் இலங்கையர்களுக்கு சுய தனிமைப்படுத்தல் இன்றி அந்நாட்டிற்கு பிரவேசிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியத்தினால் இஸ்ரேல், உருகுவே ஆகிய நாடுகள் இங்கிலாந்து பாதுகாப்பு பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், நமீபியா, ருவாண்டா, போனெய்ர், சென் யூஸ்டேடியஸ் மற்றும் சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் அமெரிக்க வேர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்தும் இங்கிலாந்துக்கு வருகை தருவோர் தனிமைப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வாரத்தினுள் எவ்வித நாடுகளும் பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.