நான் கடலுக்கு பலியானால் கொரோனா தொற்றை நாட்டிலிருந்து ஒழிக்க முடியுமாயின், அதற்கும் நான் தயார் என இன்று பாராளுமன்றத்தில் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
மருத்துவ கட்டளை சட்டத்தின் கீழ் கட்டளைகள் சிலவற்றை சமர்ப்பித்து இந்த விடயங்களை குறிப்பிட்டார். கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு சுகாதார அமைச்சர் கடலுக்கு பலியாவது பொருத்தமானது என சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் பதிவுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென குற்றம் சாட்டினார்.
கொரோனா தொற்றை முற்றாக இல்லாதொழித்த நாடாக நியுசிலாந்து கருதப்படுகிறது. இருப்பினும் அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எதிர்க்கட்சி தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை நாட்டில் கட்டுப்படுத்துவதற்காக எதிர்க்கட்சி சமர்பித்த அனைத்து ஆலோசனைகளையும் சுகாதார அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதேவேளை கொரோனா தொற்றை சமூக தொற்றாக இல்லையென்றால் பல்வேறு பிரதேசங்கள் முடக்கப்படுவது ஏன் ? என்றும் எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)