மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு சட்டம் தொடர்பான அடுத்த கட்ட தீர்மானத்தை இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கவுள்ளதாக அரச தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேல்மாகாணம் மற்றும் எஹெலியகொட, குளியாப்பிட்டிய மற்றும் குருநாகல் நகர சபை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு எதிர்வரும் திங்கள் காலை 05 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அண்மையில் தெரிவிக்கையில் மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு உத்தரவினை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.