காத்தான்குடியில் இன்று(27.11.2020) வெள்ளிக்கிழமை மேலும் சிலருக்கான பி.ஆர்.ஆர்.பரிசோதனைகளை மேற் கொள்வதற்காக அவர்களிடமிருந்து மாதிரிகள் பெற்றப்பட்டன.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கிள் வைத்து இந்த மாதிரிகள் பெறப்பட்டன.
காத்தான்குடியில் வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் ஒரு ஆண் ஆகிய இருவருடனும் தொடர்புகளை பேணி முதலாம் தொடர்பாளர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள், கொழும்பிலிருந்து வருகை தந்தோர் என 43 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக இந்த மாதிரிகள் பெறப்பட்டன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசனனின் ஆலோசனையிலும் வழிநடாத்தலிலும் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீரினால் இவர்களுக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இதன் போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அதிகாரிகளும் அங்கு சமூகமளித்திருந்தனர்.
எடுக்கப்பட்ட மாதிரிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பி.சி.ஆர்.பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்