நாட்டில் இன்றையதினம் மேலும் 368 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,271 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, 18,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 5,497 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 489 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 73 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.