கொவிட் 19 பரவலால் கொழும்பு நகரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் வைத்தியர், டொக்டர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 5 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1083 கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
´முன்னர் கம்பஹா மாவட்டத்தில் காணப்பட்ட அச்சுறுத்தல் மிகுந்த அவதான நிலைமை தற்போது கொழும்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது. விசேடமாக அண்மைய நாட்களுக்குள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம் 200 க்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் புதிய அவதான வலயங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. இது மிகவும் அவதான நிலைமையாகும்.´ ஏன அவர் கூறியுள்ளார்.