எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அனில் ஜாசிங்கவிற்கு பதவி உயர்வாக மாத்திரம் சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
மேலும் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய டொக்டர் ஜயரூவான் பண்டார தனது சுய விருப்பின் பேரிலேயே அந்த பதவியிலிருந்து விலகியதாக அமைச்சர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் பணிப்பாளர் நாயகம் பதவி வெற்றிடமாகியிருந்த போதே டொக்டர் ஜயரூவான் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றினார்.
ஆனால் தற்போது சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டொக்டர் ஜயரூவான் பண்டார சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து தனது சுய விருப்பின் பேரில் விலகியுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.