சுகாதார அமைச்சின் ஊடப பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியின் அறிவுறுத்தலுக்கமையவே இவர் பதிவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கைகள் கிடைத்தவுடன் அது தொடர்பில் அரசு முடிவெடுக்கும் என நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டிருந்த நிலையில் குறித்த குழுவின் அறிக்கைகள் கிடைக்க இரண்டு மாதங்களாவது ஆகலாம் அதுவரை ஜனாஸா அடக்கம் தொடர்பில் பழைய முடிவுகளே நடைமுறைப்படுத்தப்படும் என மருத்துவர் ஜயருவன் பண்டார நேற்றைய தினம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.