அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ,
ஜனாதிபதி செயலகம்,
கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை தற்போது அரசு வழங்கியுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் மத உரிமையை மதித்து, உணர்வுகளை புரிந்து கொண்டு உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கிய இலங்கை ஆளும் அரசுக்கும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
இலங்கை சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைக்கும், மன உணர்வுகளுக்கும் மதிப்பளித்து உங்கள் அரசு மேற்கொண்ட இந்த தீர்மானத்திற்கு முஸ்லிம்கள் என்றும் நன்றியுடையோராக இருக்க கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கை வரலாற்றில் அரசாங்கமாகவும், நாட்டின் ஜனாதிபதியாகவும் நீங்கள் மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க மிக உயர்ந்த தீர்மானமாக முஸ்லிம்கள் இதனை பார்க்கிறோம்.
நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் உங்கள் சிறப்பான பணியில் நாட்டு மக்கள் என்ற வகையில் எமது ஒத்துழைப்பை உங்களுக்கு வழங்குவதற்கு முஸ்லிம்கள் என்றும் தயாராக இருக்கிறோம் என்பதுடன், கொரோனா முதல் அலையை இலங்கை அரசு இறைவனின் உதவி கொண்டு வெற்றி கொண்டதைப் போல் தற்போதையை இரண்டாவது அலையையும் வெற்றிகொள்ள வேண்டும் என ஆசை வைக்கின்றோம்.