அண்மையில் வெளியான பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகளில் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அரசாங்கமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பிரதான அஞ்சல் காரியாலத்தில் அருகில் பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு இன்று முற்பகல் எதிர்ப்பிலும் ஈடுபட்டிருந்தது.