கொரோனாவில் உயிரிழப்போரை எரிப்பது தொடர்பில் மீள ஆராய நியமிக்கப்பட்ட குழு இதுவரை எவ்விதமான அறிக்கைகளையும் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அரசுக்கு சமர்பிக்க வில்லை என தெரிய வருகின்றது.
இருப்பினும் கொரோனாவில் மரணிப்பவர்களை எரிப்பது தான் சிறந்தது என்ற முடிவில் குறித்த குழுவினர் இருப்பதாக தற்போதைய நிலை தொடர்பில் colombogazette செய்தித் தளம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr அசேல குணவர்தன அவர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.