37 நாட்களின் பின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் MP யுமான ரிஷாத் பதியுத்தீன் விடுதலை ..!
ஒக்டோபர் 13
ரிஷாத் பதியுதீனை கைது செய்யுமாறு - சட்டமா அதிபர் பணிப்பு.
ரிஷாத் பதியுதீனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்க முடியாது. - கோட்டை நீதிவான் நீதிமன்றம்
ரிஷாதின் கொழும்பு இல்லத்தில் தேடுதல்
ரிஷாதை தேடி பொலிஸ் குழுக்கள் வலை வீச்சு.
ஒக்டோபர் 16
ரிஷாதுடன் பேசினார் எனக்கூறி எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் CID விசாரணை.
ஒக்டோபர் 19
ரிஷாத் பதியுதீன் தெஹிவளையில் கைது.
ஒக்டோபர் 21
பாராளுமன்றத்தில் ரிஷாத் குறித்த சர்ச்சை அவரை பாராளுமன்றம் அழைத்து வராமை குறித்து எதிர்க்கட்சி சரமாரியான கேள்வி.
ஒக்டோபர் 22
கொரோனா சுகாதார வழிமுறைக்கு அமைய ரிஷாத் பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டார்.
ஒக்டோபர் 27
ரிஷாதின் பினை மனு நிராகரிப்பு. நவம்பர் 10 வரை விளக்கமறியல் நீடிப்பு.
ஒக்டோபர் 29
இலங்கை அரசு -அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் MP ஐ உடன் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி - தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர் எம் அனிபா தலைமையில் தமிழ்நாடு - சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நவம்பர் 3
பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டார் ரிஷாத் பதியுதீன்.
நவம்பர்10
ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் 13 வரை நீடிப்பு.
நவம்பர் 12
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள ரிஷாத் பதியுதீனுக்கு அனுமதி மறுப்பு.
நவம்பர் 13
ரிஷாத் பதியுதீனின் பினைமனு நிராகரிப்பு. 25 வரை விளக்கமறியல்.
வெலிக்கடை மற்றும் மெகசின் சிறைகளிலிருக்கும் ரிஷாத் உள்ளிட்ட 3 MPகளை அமர்வுக்கு அழைக்காதிருக்க பாராளுமன்ற செயற்குழு தீர்மானம்.
நவம்பர் 18
பிள்ளையானுக்கு வழங்கும் சலுகையை ரிஷாத் பதியுதீனுக்கும் வழங்க வேண்டும்! - லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் முழக்கம்.
நவம்பர் 19
ரிஷாதின் சிறைக் கூண்டின் இரு பக்க கூண்டிலிருக்கும் கைதிகளுக்கு கொரோனா.
நவம்பர் 20
கட்சி தலைவர் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை வாக்கெடுப்பிற்கு அழைத்துவருவதாக சொன்ன சபாநாயகர் இப்போது பொய் சொல்லுகிறார். - பாராளுமன்றத்தில் லக்ஷ்மான் கிரியெல்ல...
நவம்பர் 25
ரிஷாத் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டார்.
(ஏ.எச்.எம்.பூமுதீன்)