Our Feeds


Thursday, November 19, 2020

www.shortnews.lk

மாகாண மட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை விபரம் இதுதான்

 



மேல் மாகாணத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,418 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஒக்டோபர் மாதம் 4 திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 6,141 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் பின்வருமாறு,

கம்பஹா - 5,667
களுத்துறை - 610
கண்டி - 278
குருநாகல் - 245
காலி - 183
கேகாலை - 139
இரத்தினபுரி - 133
மட்டக்களப்பு - 71
புத்தளம் - 65
அநுராதபுரம் - 52

எவ்வாறாயினும் ஏனைய 14 மாவட்டங்களில் இருந்து 50 இற்கும் குறைவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »