Our Feeds


Monday, November 9, 2020

www.shortnews.lk

கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர்!

 



வவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ்


இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ் பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ´கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்´ மற்றுமொரு கட்டம் இன்று (08) வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசமின்றி கலந்து கொண்டிருந்தார்.

வரவேற்பு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசம் அணியாதிருப்பதினை ஊடகங்கள் புகைப்படம் , காணொளி எடுத்தமையினையடுத்து அவர் உடனடியாக அவரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தரை வர வழைத்து முகக்கவசம் எடுத்து வருவமாறு பணித்து அதன் பின்னர் முகக்கவசத்தினை அணித்திருந்தார்.

வடமாகாணத்தில் கொரோனா பாதுகாப்பிற்காக பல்வேறு உத்தரவினை பிறப்பித்தமையும் மிகப்பெரிய பதவினை வசிக்கும் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் கொரோனா பாதுகாப்பு முகக்கவசத்தினை அணியாது நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை அங்கிருந்தவர்களுகிடையே கேள்விக்குறியினை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய வடக்கு மாகாண ஆளுநரே இவ்வாறு நடந்து கொண்டிருந்தமை கவலைக்குறிய விடயமே.

-யாழ். நிருபர் பிரதீபன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »