அசாதாரண சூழ்நிலையில் கடைகளில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அன்றாடம் தொழில் செய்து வாழ்கை நடத்தி வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
இந்த சூழ்நிலையில் வியாபாரிகள் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதனால் அன்றாடம் மக்கள் கொள்வனவு செய்ய கூடிய பொருட்கள் (அரிசி,செமன்,கிழங்கு வகைகள்,பருப்பு) கொள்வனவு செய்ய முடியாமல் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றாடம் தேவையான பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் மற்றும் விலைகளை அதிகரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இஸ்திஹார் இமாதுதீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும், நாட்களில் விலை கண்காணிப்பு அதிகாரிகளை இது தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
பொருட்களின் விலைகள் பற்றி எந்த நேரமும் கவனிக்கப்படும் பிடிபடும் வியாபாரிகளுக்கும் எதிராகவும், வியாபார நிலையங்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்துள்ளார்.