வளைகுடா நாடுகளுடன் சிறந்த உறவை பேணிவருவதாக தெரிவிக்கின்றீர்கள். அதேபோன்று அவர்கள் எமது நாட்டுக்கு ஒத்துழைப்பு வழக்குவதாக குறிப்பிட்டார்கள்.
அப்படியானால் வளைகுடா நாடுகளின் தூதுவர்கள் மற்றும் அமைப்புகளின் செயலாளர்கள் இணைந்து, இலங்கையில் கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் மையங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.
அதனால் அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்று நேற்று பாராளுமன்ற விவாதத்தின் போது வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பதிலளிக்கையில், உங்களது கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும். அது தொடர்பில் அரசாங்கம் நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. சுகாதார வைத்திய குழுவுக்கு அதுதொர்பாக கவனம் செலுத்தும் அதிகாரத்தை வழங்கி இருக்கின்றது என்றார்.