கொட்டாவ, பெலன்வத்த நீர் சுத்திகரப்பு நிலையத்தில் திருத்த வேலை காரணமாக
இன்று (17) இரவு 9 மணி முதல் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
பெலன்வத்த, எரவ்வல, சித்தமுல்ல, பிங்ஹேன சந்தி, கொரகபிட்டிய, மொரகெட்டிய
வீதி மற்றும் நிவன்பிடிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுப்பட
உள்ளது.
இதேவேளை வாத்துவ மற்றும் களுத்துறை பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் 11
நேரத்திற்கு மேலதிகமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு,
கட்டுகுருந்த, நாகொட, பென்தொட்ட, பிம்புவல, பிலமினாவன்ன, பயாகல, மங்கொன,
பேருவளை, அளுத்கம, தர்கா நகர், களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய
பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.