கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை உலகம் முழுவதும் அடக்கம் செய்து வரும் நிலையில் இலங்கையில் மாத்திரம் அடக்கம் செய்வதற்கு மறுக்கப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் 05,2020 கொரோனா தொற்றால் உயிரிழந்த திருவாரூர் மாவட்டம் பொதக்குடி, தருமபுரி மாவட்டம் தருமபுரி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஆகிய இடங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 03 சகோதர, சகோதரிகளின் உடல்களை தமுமுக தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர்.
இலங்கை அரசின் செயல்பாட்டை கண்டித்து இன்று மாலை 04.00 மணிக்கு தமுமுக சார்பில் சென்னையில் இலங்கை தூதுவராலயத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.