2018ம் ஆண்டு கண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு முன்னால் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கினார்.
அவர் மேலும் கூறுகையில் பொலிஸ்மா அதிபர் என்ற வகையில் திகன வன்முறையின் போது பூஜித ஜயசுந்தர தனது கடமைகளை சரிவர செய்யவில்லை. அதனை தடுப்பதற்கு தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளுக்கு அவர் எவ்வித ஆலோசனைகளையும் வழங்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அதனை தடுத்திருக்கலாம்.
ஸஹ்ரான் குழுவினர் தாக்குதல் நடத்தவும், தனது அணிக்கு ஆள் சேர்த்துக் கொள்ளவும் திகன சம்பவமே காரணம் என நான் பின்னர் அறிந்து கொண்டேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.