சென்னை விருகம்பாக்கம் சித்தி விநாயகர் கோவில் முன்பு தேங்கிய வெள்ளத்தை எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் அகற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
நிவர் புயலால் தென் சென்னை பகுதிகளில் ஏற்பட்டு வரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு உதவி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சித்தி விநாயகர் கோவில் முன்பு வெள்ளம் தொடர்ந்து தேங்கி, கோவிலுக்குள் புகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு வந்த எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், மழை நீரை, பாதாள சாக்கடை வழியாக வடியச் செய்தனர்.
இது இன நல்லிணக்கத்திற்கு ஒரு உதாரணம் என சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.