கொரோனா வைரசின் 2-வது அலை காரணமாக துருக்கி ,பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் ´´கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தான், துருக்கி, ஈரான், சிரியா ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.