தாவூத் போஹ்ரா சமூகத்தின் தலைவர் செய்யதினா முபாதல் தமது உதவியாளர்கள் 36 பேருடன் இலங்கைக்கு வந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி அவரும் குழுவினரும் இலங்கையை வந்தடைந்ததாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இவர்கள் அனைவரும் 72 மணித்தியாலங்களுக்கு உட்பட்ட பீசீஆர் பரிசோதனை சான்றிதழ்களுடன் கட்டுநாயக்க வானூர்தி தளத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்தியாவின் மும்பையை தலைமையகமாக கொண்ட டாவூதி போஹ்ராவின் தலைவர், இந்தியாவில் கொரோனா பரவல் நிலைமையை தொடர்ந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இலங்கைக்கு வர தயாராகி இருந்த போதும் அது தாமதமானது.
இதனை தொடர்ந்தே அவரும் அவரின் குழுவினரும் இலங்கைக்கு வந்துள்ளனர் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.