கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குங்கள். கொரோனா தாக்கம் தொடர்பில் எதிர் கட்சியாக நாம் என்ன ஆலோசனை கூறினாலும் “உலக சுகாதார நிறுவனத்தின் தீர்மானத்தின்படி தான் நாங்கள் செயல்படுகின்றோம்” என்று கூறும் சுகாதார அமைச்சர் கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் அடக்க விடயத்தில் மாத்திரம் ஏன் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களை அரசாங்கம் பின்பற்றுவதில்லை. என எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (30) பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் கொரோனா தொற்று என்ற பெயரில் கொரோனா தொற்றாத எத்தனை முஸ்லிம்களின் உடல்களை எரித்துள்ளீர்கள்? நான் பட்டியலை வெளியிடவா? எனவும் எதிர் கட்சி தலைவர் சுகாதார அமைச்சரைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.