கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இது தொடர்பில் ஆராய்வதற்காக பணிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கைகள் இன்னும் என்னிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்பட வில்லை.
அடக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக பணிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் செயல்படவுள்ளதாகவே அமைச்சரவையினால் எனக்கு அறிவிக்கப்பட்டது.
விசேட குழுவின் அறிக்கைகள் கிடைக்கப் பெற்ற பின்னர் அது தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.