கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் கஷ்டங்களைத் தணிப்பதற்காக இன்று தொடக்கம் உதவி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட இருப்பதாக மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முப்படையினர் மற்றும் பொலிசாரின் துணையுடன், மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 18 தபாலகங்கள் ஊடாக எதிர்வரும் 13ஆம் திகதி வரை கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பயனடைய இருப்போரின் எண்ணிக்கை 13 ஆயிரமாகும். இது பற்றி ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும். மேலதிக விபரங்களை தொலைபேசி மூலம் அறிந்து கொள்ள முடியும். அழைக்க வேண்டிய இலக்கம் 077 67 52 273 ஆகும் என மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.