Our Feeds


Friday, November 6, 2020

www.shortnews.lk

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை...!‎

 

ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 20 ரூபாவாக நிர்ணயித்தல், சாதாரண ‎சேவை கட்டணத்தை குறிப்பிடத்தக்களவு அதிகரித்தல் உள்ளிட்ட 10 ‎யோசணைகள், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் ‎தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தனியார் ‎பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் ‎தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேண வேண்டும் என சுகாதார ‎அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பேருந்துகளில் ஆசனத்தில் அருகருகில் பயணிகள் அமர்ந்து செல்லலாம் ‎என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த முரண்பாடான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும் ‎என தாங்கள் கோருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் ‎சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஆகக் குறைந்த பேருந்து கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க ‎வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய கட்டணத்தை குறிப்பிடத்தககளவு அதிகரிக்க ‎கோரியுள்ளதாகவும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். ‎

 இலங்கையில் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை! -  HRTamil Sri Lankan Tamil News Website எச்.ஆர்.தமிழ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »