இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களை எரிப்பதில் எதுவித பிரச்சினையுமில்லையென முஸ்லிம் பெண்கள் போன்ற வேடமிட்டவர்களைக் கொண்டு டான் பிரசாத் நாடகம் ஒன்றை அரங்கேற்ற முயற்சி செய்துள்ளமை தோல்வியடைந்துள்ளது.
ஜனாஸா அடக்தக்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களிடம் உறுதிப்படுத்திய பின்னர் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பியிருந்த கடிதத்தை கூலிக்கு அமர்த்தப்பட்ட சிலரைக் கொண்டு விமர்சிப்பதோடு நீதியமைச்சர் அலி சப்ரி இவ்விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறும் வகையில் பிரியசாத் இந்நாடகத்தை அரங்கேற்ற முனைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதில் 'சம்பிரதாய' முஸ்லிம்கள் என இரண்டு பெண்களையும் ஒரு தொப்பியணிந்த ஆணையும் காட்சிப்படுத்தியிருந்த டான், அவர்கள் மூலமும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான கருத்துக்களை பேசி தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முனைந்துள்ளார்.
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இலங்கையில் கொரோனாவின் முதல் அலை வந்த நேரத்திலிருந்து கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் எரிப்பதை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றது.
கொரோனா இரண்டாம் அலை இலங்கையில் ஏற்பட்ட நேரத்திலிருந்து இலங்கையில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தவிர வேறு எந்தவொரு அமைப்பும் ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வில்லை.
CTJ அமைப்பினர் இடை விடாது ஜனாதிபதி பிரதமர் நீதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சின் செயலாளர் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குங்கள் எனக் கூறி கடிதத்திற்கு மேல் கடிதம் அனுப்பி அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சமூக வலைதளங்கள் மூலம் ஜனாஸா அடக்க அனுமதி வேண்டி பெரும் கருத்துருவாக்கத்தையும் CTJ அமைப்பினர் மேற்கொண்டனர்.
இறுதியில் கடந்த செவ்வாய்கிழமை ஜனாஸா அடக்க அனுமதி கேட்டு மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை இவர்கள் அறிவித்த நிலையில் ஆர்பாட்டம் நடத்த வேண்டாம் என முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தன.
முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பவும் தயாரில்லாத முஸ்லிம் அமைப்புகள் CTJ அமைப்பினர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பும் போது அதற்கு எதிராகவும் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்கள்.
இறுதியில் ஜனாஸா அடக்க அனுமதி கிடைத்து விட்டதாக உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தியின் ஓடியோ ஒன்று வெளியிடப்பட்டதுடன், குறித்த செய்தியை நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களிடம் உறுதிப்படுத்திய பின்னர் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிக் கடிதமும் அனுப்பிருந்தார்கள்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து சொல்ல வந்த கலபொட அத்தே ஞானசார தேரரோ அடக்கம் செய்வதற்கு தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறி விட்டதுடன் CTJ அமைப்புடன் தனக்கிருக்கும் பரம்பரை பகையை தீர்க்கும் வகையில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத விவகாரங்கள் சிலவற்றை பேசினார்.
அதிலும், ஞானசார தேரர் மிகத் தெளிவான ஒரு விடயத்தை மக்களுக்கு முன்வைத்தார். அதாவது அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் முஸ்லிம் ஜனாஸாக்கள் தேவையில்லை சாம்பலை அடக்க தாருங்கள் என கேட்கிறார். ஆனால் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரோ சாம்பல் வேண்டாம் உடல்களை சுகாதார வழிமுறை பேணி அடக்கத் தாருங்கள் என கேட்கிறார்கள்.
இலங்கை அரசாங்கமும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கைக்கு இணங்கி உடல்களை அடக்க கொடுக்க முடிவெடுக்கிறார்கள். அப்படியானால் உலமா சபையின் பேச்சை கேட்க்காமல் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சையா ஜனாதிபதி கேட்கிறார்? என வினவினார் ஞானசார தேரர்.
இந்நிலையில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட சிங்கள மொழி மூலமான கடிதம் சிங்கள ஊடகங்களில் பிரதான பேசுபொருளாக மாறியதுடன் பெரும்பான்மை பௌத்த மத குருமார்களும் முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குங்கள் என கோரிக்கை முன்வைக்க ஆரம்பித்தனர்.
குறிப்பாக கத்தோலிக்க மத சகோதரர்களும் கொரோனாவில் மரணிக்கும் கத்தோலிக்கர்களின் உடல்களை அடக்க அனுமதி தாருங்கள் என்ற கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் குறித்த கடிதத்தின் தெளிவூட்டல் காரணமாக பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கதிற்கு அனுமதி வழங்குங்கள் என்ற கோரிக்கை பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் தான் முஸ்லிம்களின் கொரோனா ஜனாஸா அடக்க கோரிக்கைக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரவேற்பை திசை திருப்பும் வகையில் இன்று டான் பிரியசாத் தலைமையில் குறித்த நாடகம் அறங்கேற்ப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் நம் சமூகத்தில் இருக்கும் வரை இது போன்றவர்கள் தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
இருப்பினும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்களுடன் முஸ்லிம் சமூக அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த உரிமையை வென்றெடுப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.
ஆனால், ஜனாஸா அடக்க அனுமதி கிடைத்தால் அது தம்மால் தான் கிடைத்தது என புள்ளி போட்டுக்கொள்ள உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தியில் இருந்து லெட்டர்பேடை மட்டுமே இயக்க ஆதாரமாக கொண்டுள்ள அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.
ஜனாஸா அடக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்து போராட அலைத்தால் போராட்டத்திற்க செல்ல முடியாத தமது கையாளாகத்தனத்தை மறைத்துக் கொள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட அழைப்பையே விமர்சிப்பார்கள்.
இப்படியான சிரிசங்கு நிலையில் நம் சமூகம் இருக்கும் போது எப்போதுதான் விடிவு கிட்டுமோ?