Our Feeds


Wednesday, November 18, 2020

www.shortnews.lk

ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நாட்டிய இலங்கை இராணுவம்

 



தேசிய வனப்பகுதியை அதிகரிப்பதற்கும் அழகுபடுத்துவதற்கும் இராணுவத் தளபதியால் அறிமுகப்படுத்தப் பட்ட 'துரு மிதுரு நவ ரட்டக்' எனும் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஒரு மாபெரும் மர நடுகைத் திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

குறித்த திட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் வெள்ளிக்கிழமை (13) ஒரே நாளில் 100 000 அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

குறித்த நிகழ்வில் 22,23,24 ஆவது படைப் பிரிவு மற்றும் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படை ஆகிய படைப் பிரிவுகளைச் சேர்ந்த 800-900 படையினர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டமானது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றதுடன் இந்த திட்டத்தில் படைப் பிரிவுகளின் அனைத்து படைத் தளபதிகள், பிரிகேட் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், சிவில் அதிகாரிகள் மற்றும் அனைத்து இராணுவச் சிப்பாயினர், பிரதிநிதிகள் ஆகியோர் கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது கலந்து கொண்டனர்.

இந்த பிரம்மாண்டமான பணிக்காக அரசு நிலங்களை வழங்கிய பின்னர் வனத்துறையின் அதிகாரிகள், கிழக்கு தளபதியின் வேண்டுகோளின் பேரில், மீ, கும்புக், புளி, மார்கோசா, தேக்கு, மஹோகனி போன்ற 100,000 உள்நாட்டு மரக்கன்றுகளை படையிருக்கு வழங்கினர். அதன்படி, திருகோணமலையில் 22 ஆவது படைப் பிரிவு படையினர் 22,000 மரக்கன்றுகள், புனானியில் 23ஆவது படைப் பிரிவு (27,400 தாவரங்கள்), அம்பாறையில் 24ஆவது படைப் பிரிவு படையினர் (27,193 மரக்கன்றுகள்) மற்றும் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படை (25,000 தாவரங்கள்) முறையே நடவு செய்தனர், இவை அனைத்தும் வனத்துறையால் ஒதுக்கப்பட்ட அதே நாளில் (13) அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளில் நடப்பட்டன.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்கள் 22 வது படைப்பிரிவின் விஜயத்தின் பின்னர் மின்னேரியா, மீயாங்குளம் மற்றும் அம்பாறை பகுதிகளில் மர நடுகை திட்டத்தில் அதிகாரிகள் மற்றும் படையினருடன் இணைந்து அவரது பங்களிப்பின் அடையாளமாக மரக் கன்றுக்களை நாட்டி வைத்தார். மழைக்காலம் தொடங்குவதுடன் மரக்கன்றுகளை நடுவதற்காக. சில நாட்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான படையினர் நிலத்தை ஒழுங்குப்படுத்தல் மற்றும் குழி தோண்டல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதே நாளில் பராமரிப்பு திட்டம் அப்பகுதிக்கு பொறுப்பான படையினரின் பொறுப்பில் நடைமுறைக்கு வந்தது. கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிவுகளினால் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் மீள் காடு உருவாக்கத்திற்கான வேலைத் திட்டத்தை வன திணைக்கள அதிகாரிகள் தேவையான மரக் கன்றுக்களை பெற்று கொடுத்ததன் பின்னர் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »