இம்முறை 5ம் தர புலமை பரிசில் பரீட்சையில் 199 மதிப்பெண்களைப் பெற்று அகில இலங்கையில் சாதனை படைத்த மாணவி எம்.ஏ.ஏ. செய்னாவை கௌரவித்து புத்தளம் நகரின் அதி உச்ச கௌரவ விருதான "நகர பிதா விருது" (City father award) புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
அத்தோடு இச்சாதனையைபுரிய உறுதுணையாக செயற்பட்ட கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி மற்றும் வகுப்பாசிரியர் உட்பட சாதனை மாணவியின் பெற்றோருக்கும் கௌரவம் அளிக்கப்பட்டது.
மேலும், குறித்த மாணவியின் கல்வி நடவடிக்கைகளுக்காக டெப் சாதனமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று (19) சபை அமர்வின் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.