நாட்டில் எப்பிரதேசத்தில் இருந்தாலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.