தமிழகத்தை அண்டிய இந்திய பெருங்கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்க ஆரம்பித்துள்ளது.
கடும் மழையும், புயல் காற்றும் வீசி வரும் நிலையில் இந்திய இஸ்லாமிய அமைப்புகள் ஆபத்தில் சிக்கியுள்ள சகோதரர்களை மீட்டு பாதுகாப்பளிக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிமுன் அன்சாரி MLA தலைமையிலான மனித நேய ஜனநாயக கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளுடன் இன்னும் பல இஸ்லாமிய அமைப்புகள் இப்புனித பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.