Our Feeds


Saturday, November 28, 2020

www.shortnews.lk

முன்னர் தாக்குதல்கள் காட்டுக்குள் தீர்மானிக்கப்பட்டது - ஆனால் ஸஹ்ரான் அப்படி செய்யவில்லை - அஜித் ரோகன வழங்கிய சாட்சியம்

 



பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சில முக்கிய பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இறுதி சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பில் நாட்டில் உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (27) சாட்சியம் வழங்கிய அஜித் ரோஹண கூறியுள்ளார்.

பொலிஸ் சட்ட பிரிவுகளுக்கு பொறுப்பாகவுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஆணைக்குழுவில் முன்னிலையாகி பாராளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சாட்சி வழங்கினார்.

´நீதிபதி அவர்களே, தற்போது நாட்டில் உள்ள பயங்கரவாத பிரச்சினைகளுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தற்காலிக பயங்கரவாத தடுப்புச் சட்டம் போதுமானதாக இல்லை என்பதை அப்போதைய அரசாங்கம் 2016 இல் உணர்ந்துக்கொண்டது. ஏனென்றால் 1979 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிலவிய பயங்கரவாத பிரச்சினைகள் இப்போது நாட்டில் இல்லை.´ பயங்கரவாதம் மற்றும் விசாரணைகள் தொடர்பாக உலகில் தற்போது நடைமுறையில் உள்ள நடைமுறைகளுக்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அப்போதைய பிரதமர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த சகல ரத்நாயக்க உள்ளிட்ட 12 பேர் அங்கம் வகித்தனர். அந்த குழு 27 தடவைகளுக்கு மேல் கூடி, முக்கியமான சட்ட உட்பிரிவுகள் குறித்து கலந்துரையாடி சில சரத்துக்களை உட்சேர்க்கவும், நீக்கவும் தீர்மானித்ததுடன் அதற்கமைவாக சட்டமூலத்தை தயாரித்தது´ என தெரிவித்தார்.

எனினும் இவ்வாறு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சில முக்கிய பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இறுதி சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

´நீதிபதி அவர்களே, சஹ்ரான் எவ்வாறு பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தார்?. மற்றவர்களுடன் தொடர்பை பேணியது எவ்வாறு? இந்த விடயங்கள் உங்களுக்கு அறிந்துக்கொள்ள கூடியதாக இருந்திருக்கும். முன்பு தாக்குதல்கள் காட்டுக்குள் தீர்மானிக்கப்பட்டன. ஆனால் சஹரான் அவ்வாறு செய்யவில்லை. இணையம் வந்ததிலிருந்து அனைத்தும் மாறியது. ஏப்படியிருப்பினும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் உளவுப் பார்ப்பது என்ற பிரிவின் கீழ் தவறு ஒன்று இழைக்கப்பட்டது. எனினும் இறுதியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் அந்த விடயம் உள்ளடக்கப்படவில்லை.´ என கூறினார்.

எனினும் பின்பு அமைச்சர் தினேஸ் குணவர்தன அந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை விலக்கிக் கொண்டதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »