Our Feeds


Monday, November 16, 2020

www.shortnews.lk

குழந்தைகளை அதிகளவு கொரோனா பாதிக்காமைக்கான காரணம் கண்டுபிடிப்பு

 



உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பிலிருந்து குழந்தைகள் அதிக அளவில் தப்பி உள்ளதை வைத்தியர்கள் ஆராய்ந்துள்ளனர். அதற்கான காரணத்தையும் கண்டுபிடித்து உள்ளனர். அதாவது குழந்தைகளுக்கு கொரோனா  வைரசை  எதிர்த்து போராடும் புரதச்சத்து அதிக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


பொதுவாக கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவி மனிதனின் தோலில் உள்ள துளைகள் மூலம் உள்ளே புகுந்து நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.


இதை எதிர்த்து போராடும் புரதச்சத்து குழந்தைகளுக்கு அதிக அளவில் சுரக்கிறது. அதன் அடிப்படையில் அந்த வகையான புரதச்சத்தை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சோதித்து பார்க்க வைத்திளர்களும், ஆராய்ச்சியாளர்களும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக வான்டர்பில்ட் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரும், வைத்தியருமான ஜெனிபர் கூறியதாவது:-


“நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் குழந்தைகளை ஏன் கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதிக்கவில்லை என்று கண்டறிந்துள்ளோம். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எங்களுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறோம்.


நுரையீரலை பாதுகாக்கும் புரதச்சத்து தான் கொரோனா வைரசை கடுமையாக எதிர்த்து போராடுகிறது. அந்த வகையான புரதச்சத்தை மற்றவர்களிடம் இருந்து தானமாகவும் பெற முடியும். விரைவில் அந்த புரதச்சதை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சை அளித்து சோதித்து பார்ப்போம்“ என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »