ஈரானின் சிரேஷ்ட விஞ்ஞானியான மோஹ்சென் ஃபக்ரிசாடே கொல்லப்பட்டதன் பின்னணியில், இஸ்ரேல் செயற்பட்டிருப்பதாக, ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவரது படுகொலைக்கு ஈரான் சரியான தருணத்தில் பதலடிகொடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஃபக்ரிசாடேவின் படுகொலை யாரால் புரியப்பட்டது என்பது குறித்த எந்தவிதமான தகவல்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.