COVID19 | கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது பற்றி அறிவூட்டுமுகமாக சுகாதார விதிமுறைகள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அலவதுகொடை நகரின் கடைகளில் ஒட்டுவதும், விநியோகிப்பதும் இடம்பெற்றது.
மற்ற பிரதேச சபைகளை விட அக்குரணை பிரதேச சபையின் செயல்பாடுகள் மக்கள் பாராட்டை பெறும் வகையில் பல விதமான முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டு வருகின்றன.
கொரோனா காலத்தில் வெரும் அறிவிப்புக்களை மாத்திரம் செய்து கொண்டிருக்காமல் பிரதேச சபை தலைவரே களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றுவது கவனிப்புக்குள்ளாகியுள்ளது.
இதன்போது கௌரவ தவிசாளர் இஸ்திஹார் அவர்களுடன் உப தவிசாளர் சரத் அமரகோன், பிரதேச சபை உறுப்பினர் அல்விஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.