அடையாளம் காணப்படாத நோயாளிகளிடமிருந்து கொவிட் - 19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கிலேயே சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் ஆய்வு பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் அதிக ஆபத்தான பகுதிகளாக உள்ளதுடன் அங்கு தொடர்ந்தும் நோயாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
´அதிக ஆபத்து மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, அந்த பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்படாத தொற்றாளர்களும், நோய் அறிகுறியற்ற நபர்களும் இருக்கலாம். எனவே தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பொது மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம். விசேடமாக தொழில் புரிபவர்கள் இந்த நிலைமை குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும், மற்ற பகுதிகளில் குறைந்தளவான ஆபத்துள்ளது என கூறுப்படுவது ஆபத்தில்லை என்று அர்த்தப்படாது.´
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை உரியவாறு கடைப்பிடிதத்தன் மூலமாகவே அந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் உத்தரவை நீக்க முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.