(யாக்கூப் பஹாத்)
கிழக்குமாகான வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், வனஜீவராசிகள் பாதுகாப்பு, வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க (பா.உ) அவர்களது அம்பாறை மாவட்ட இணைப்பாளராகவும் திரு. றிஸ்லி முஸ்தபா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் அவர்கலினால் வழங்கி வைக்கப்பட்டத்தை அடுத்து இன்று இதற்கான வரவேட்பு நிகழ்வானது. நிந்தவூர் FFC உரிமையாளர் U. ஜெமில் (jp) மற்றும் M.M முபாசிர் அவர்களின் ஏற்பாட்டில் இன்று FFC வளாகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் SLPP முன்னால் பாராளுமன்ற வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களும், முன்னால் பிரதேச சபையின் வேட்பாளர் M.தாரிக் மேர்ஸா, M.யாகூப், A.R.M ஜெசார், B.M முபாசிர் (JP), மற்றும் எமது நிந்தவூர் SLPP யின் தேசிய போராளிகள் மற்றும் SLFP சஹீல் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஏனைய எமது கட்சியின் போராளிகளும் கலந்து சிறப்பித்தனர்.