கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வந்த, ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா குணமடைந்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நாடத்திய பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.
இதனையடுத்து அவர், கடந்த நவம்பர் 07ஆம் திகதி வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் பூரண குணமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.