அன்சார் எம்.ஷியாம்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ்வால் கட்டப்பட்ட மட்டக்களப்பு புனானியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் மக்கள் ஐக்கிய சக்தியின் பா.ம. உறுப்பினர், கவிந்த ஜயவர்தன இது தொடர்பாகக் கடுமையாகக் கேள்வி எழுப்பிய போதே, அமைசச்சர் இதனைத் தெரிவித்தார்.
“இந்த நிறுவனத்தில் நடத்தப்படவுள்ள படிப்புகளில் ஷரியா சட்டம் குறித்த ஒரு பாடமும் உள்ளது. நாங்கள் ஷரியா சட்டத்தை மட்டுமல்ல; எல்லாவற்றையும் தேடுகிறோம். முக்கியமானது பாடத்தின் பெயர் அல்ல. எதுவும் இந்த நாட்டின் அரசியலமைப்பின் படி இருக்க வேண்டும். மேற்கூறிய நிறுவனம் பட்டங்களை வழங்க அந்த நிறுவனத்திற்கு நாங்கள் எந்த அதிகாரமும் வழங்ககவில்லை.
இந்த அரசாங்கத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனமாக நாங்கள் இதை வைத்திருக்கவில்லை என்பது வெளிப்படை.
அந்த பரந்த வளங்களை நாங்கள் எடுத்துக் கொண்டு, மாணவர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவோம். இதில் மறைக்க எதுவும் இல்லை. ” என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பதிலளித்தார்.
ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக மாத்திரமன்றிமன்றி, வைத்தியர் ஷாபி மற்றும் மத்ரஸா நிறுவனங்களை அகற்றுறுவது தொடர்பாகவும் கவிந்த ஜயவர்தன தீவிரமாக கருத்துக்களை முன்வைத்ததோடு- அவற்றைத் தடை செய்வதாக வாக்களித்த அரசாங்கம் தற்போது அவற்றைக் கண்டு கொள்ளாமல்இருக்கிறது என்றும் குற்றம் சுமத்தினார்.
எந்தப் புற்றில் இருந்து எந்தப் பாம்பு எப்படிப் படம் எடுக்கும் என்றே தெரியவில்லை.