Our Feeds


Thursday, November 19, 2020

www.shortnews.lk

ரிஷாட் பதியுதீனின் சாரதி ஒருவர் பிணையில் ‎விடுதலை..!‎

 

 

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மகிழுந்தில் இருந்து ‎இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ‎வைக்கப்பட்டிருந்த அவரது இரண்டு சாரதிகளில் ஒருவர் 5 லட்சம் ‎ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவிடம் ‎நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு ‎பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ‎எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ‎வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த ‎லியனகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கொரோனா பரவல் நிலை காரணமாக அவர் அன்றைய தினம் ‎நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களர்களை பேருந்தில் ‎அழைத்து சென்று தேர்தலை சட்டத்தை மீறி பொது சொத்தை ‎பயன்படுத்தியதாக தெரிவித்து சட்டமா அதிபரினால் மனு தாக்கல் ‎செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.‎ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமனம் - Newsfirst

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »