Our Feeds


Wednesday, November 18, 2020

www.shortnews.lk

தந்தையின் இழப்பு சாதனைக்கு தடையில்லை - புலமைப் பரிசிலில் சாதித்த புதுக்குடியிருப்பு மாணவி

 



முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் கிசானிகா லோகேஸ்வரன் என்ற மாணவி, தனது தந்தை இறந்து நான்கு மாதத்தில் பரீட்சைக்கு தோற்றி பரீட்சையில் சாதனை படைத்துள்ளார். இந்த மாணவி அண்மையில் வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளை பெற்று சாதித்துள்ளார். குறித்த மாணவி தனது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு வைத்தியராக வருவதே எனது எதிர்கால இலட்சியம் எனவும் தெரிவித்துள்ளார். 


குறித்த மாணவியின் குடும்பத்தில் தந்தை ,தாய் ,இரண்டு சகோதரர்கள் என 5 பேர் உள்ளனர். சமூக சேவையாளரான  தந்தை லோகேஸ்வரன் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை கொண்டு நடத்தியதுடன் தனது பிள்ளைகள் கல்வி கற்பதற்கான  வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் .


இந்நிலையில்  2020-05-31 அன்று சுகயீனமுற்றிருந்த நிலையில் தந்தை லோகேஸ்வரன் உயிரிழந்துள்ளார். தந்தையின்  இறப்பு ஒருபுறமும், நாட்டில் நிலவிய கொரோனா நிலவரத்தினால் பாடசாலை கல்விகள் சீராக இடம்பெறாமை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுத்து கல்வி கற்ற மாணவி தந்தையை இழந்து நான்கு மாதங்களில் கடந்த மாதம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்தார். 


இந்நிலையில் வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளை பெற்று அவர் சாதித்துள்ளார். குறித்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சித்தியடைந்ததையிட்டு மகிழ்வடைவதாகவும், அதற்காக முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு தன்னை வழிநடத்திய அதிபர், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது துன்பமான சூழ்நிலையில் தன்னை ஆறுதல்படுத்தி பரீட்சை எழுத வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். 


எதிர்காலத்தில் தனது தந்தையின் கனவை நனவாக்கி வைத்தியராக வந்து எனது மாவட்ட மக்களுக்கு சேவையாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »