Our Feeds


Thursday, November 5, 2020

www.shortnews.lk

இலங்கை ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு சர்வதேச இஸ்லாமிய ஒன்றியம் கடும் கண்டனம்

 



கொரோனாவில் மரணிப்போரின் உடல்களை எரியூட்டும் இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு உலக இஸ்லாமிய கூட்டமைப்பின் (OIC) மனித உரிமைகளுக்கான பிரிவு (IPHRC) தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளது.


மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது என்பது முஸ்லிம்கள் உட்பட பல மதத்தினர் பின்பற்றும் ஒரு நடைமுறை. பல மனித உரிமை அமைப்புகளும், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரும் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கை குறித்து இலங்கை அரசாங்கத்தை அதன் முஸ்லீம் சிறுபான்மையினரின் அடக்கம் உரிமைகளை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.


சர்வதேச மனித உரிமைகள் சட்டம், குறிப்பாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) பிரிவு 18 அனைத்து மக்களின் மத சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது, அதில் அவர்களின் மதம் அல்லது வழிபாட்டில் நம்பிக்கையுடன் செயல்படும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.


சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து ICCPR பிரிவு 27, மத சிறுபான்மையினருக்குறிய உரிமைகளை மறுக்கக் கூடாது என்பதை மேலும் வலியுறுத்துகிறது.


கோவிட் -19 தொற்று நோய்க்குள்ளாகி மரணிப்பவர்களை எரியூட்டும் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த எந்தவொரு சுகாதார ஆலோசனைளும் இலங்கை அதிகாரிகளினால் கடைப்பிடிக்கப்படவில்லை. என்பதை இங்கே நினைவு கூர்வது பொருத்தமானது, என்பதுடன் ஜனாஸாக்களை எரியூட்டுவதற்கு முறையான நியாயங்கள் எதுவும் இலங்கை அரச தரப்பில் இல்லை. என அவ்வமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 


முழுமையான அறிக்கை இதே!


OIC-IPHRC expressed deep concerns over reports of forced cremation of bodies of Muslims who died due to Coronavirus by the Srilankan authorities as violative of the right to freedom of religion of its Muslim minority

JEDDAH; The Independent Permanent Human Rights Commission (IPHRC) of the Organization of Islamic Cooperation (OIC) expressed its deep concerns over multiple reports indicating that Sri Lankan government is cremating all people who die due to Covid-19 Pandemic, effectively banning burials, a practice followed by many religious minorities including Muslims. The issue has been raised by many human rights organizations and the United Nations Special Rapporteur on freedom of religion and belief urging the Sri Lankan government to respect burial rights of its Muslim minority. 

The International Human Rights Law, specifically Article 18 of International Covenant on Civil and Political Rights (ICCPR), protects the freedom of religion of all people, which includes manifesting their religion or belief in worship, observance and practice. Article 27 of ICCPR on the rights of minorities, further stresses that religious minorities shall not be denied the right, in community with the other members of their group, to enjoy their own culture as well as to profess and practice their own religion. Here it is pertinent to recall that the measure of forced cremation by the Srilankan authorities is not covered under any health advisory prescribed by World Health Organization to enhance governmental responses to the Covid-19 Pandemic. Hence, there is no reasonable justification to enforce cremation as an obligatory measure. 

Accordingly, IPHRC urges the Sri Lankan government to fulfill its human rights obligations by protecting and respecting the right of its Muslim minority to practice their religion free from any discrimination, including the uncompromised right to honor the dignity of their dead in line with their religious beliefs and obligations. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »