கொரோனாவில் மரணிப்பவர்களை எரிப்பதா? அடக்கம் செய்வதா என்ற முடிவை அமைச்சரவைக்கு எடுக்க முடியாது. இது தொடர்பில் சுகாதார துறை எடுக்கும் தீர்மானத்தை செயல்படுத்தவுள்ளோம் என அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.