நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கின் பின்னர், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் யாரேனும், உள்நுழைவதோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதோ முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேற்படி உத்தரவு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.