இதேவேளை, இன்றைய தினம் 294 கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் பதிவான நிலையில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 17,730 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 11,156 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
நாட்டில் 7,467 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் (24) மேற்கொள்ளபட்டதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கினிகத்தேன, சியம்பலாபே தெற்கு, பண்டாரகம் மற்றும் கொழும்பு 15 பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 02 பேரும், டுபாயிலிருந்து நாடு திரும்பிய 50 பேரும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 92 பேரும் மற்றும் மாலை தீவிலிருந்து நாடு திரும்பிய 53 பேரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 4,797 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94ஆக பதிவாகியுள்ளது.