கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுத்து அடக்குவதற்கு அனுமதி பெற்றுத் தரும் வகையில் இன்றைய தினம் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் அரச தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது.
நீதி அமைச்சரின் யோசனைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா, காமினி லொக்குகே, மற்றும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியை சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுவரை உறுதி செய்யவில்லை.