தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளினுள் நுழையவோ அல்லது அங்கிருந்து வௌியேறவோ யாருக்கும் இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.