நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 704 கொரோனா தொற்றாளர்களில் 541 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய திவுலபிட்டி பேலியகொடை ஆகிய இரண்டு கொத்தணிகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது.