இன்று சமூகத்தில் பேசு பொருளாகிருக்கும் விடயம் பற்றி பேச விரும்புகிறேன். நான் மாதவிடாய் வரி என்று இதை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் வரி அறவிடாது வழங்குமாறு பதிவிட்டுள்ளார், ஷெஹான் சேமசிங்க அவர்கள் அதை உறுத்திப்படுத்தும் விதமாக தமது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார். நிதி அமைச்சர் தெரிவிக்க வேண்டியதை நாமல் ராஜபக்ஷ மூலமாக தெரிவிக்க வருவதைக் கொண்டு எங்களுக்கு புலப்படுவது அரசாங்கத்தின் செயற்பாடுகளை தீர்மானிப்பது வெதமுலன குடும்பமாகும். எவ்வளவு தான் அமைச்சுக்களுக்கான விடயப்பரப்புக்கள் வேறாக்கப்பட்டாலும் தீர்மானம் எடுப்பது ஒரு இடத்திலாகும்.
யார் என்ன கூறினாலும் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்க்கு நூற்றுக்கு ஐம்பத்தி ஒரு வீதம் வரி அறவிடும் நாடு இது. ஆரோக்கிய துவாய்க்கு வரி அறவிடுவதை சாதாரன விடயமாக கையாள முற்படுவது கேவலமான விடயமாகும்.பிள்ளைகளின், வயது முதிர்ந்த பெண்களின் மற்றும் அங்கவீன பெண்களின் இயற்கை கழிவு வெளியேற்றத்தைக் கொண்டு வரி அறவிடும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கிறது.
பெண்களைப் பொருத்த வகையில் ஆரோக்கிய துவாய் ஓர் அத்தியாவசிய பொருளாகும் மாறாக அது ஒரு மேலதிக ஆடம்பர பொருள் அல்ல என கூறுகிறேன்.இன்று ஐம்பத்தி ஒரு வீத வரி அறவிடப்படுகிறது. ஆரோக்கிய துவாய்க்கு நூற்றுக்கு 101.2 வீத வரி அறவிட்டுக்கொண்டிருந்தது,இதை 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் வரியில் நாப்பது வீதத்தை இல்லாமலாக்கியது.மீண்டும் பத்து வீத வரி விடுவிப்பை சமூக செயற்ப்பாட்டாளர்களின் வேண்டுகோளின் பேரில் நீக்கியது.தற்போது இந்த அரசாங்கம் ஆரோக்கிய துவாய்க்கு நூற்றுக்கு 15 வீத வெட் வரியையும்,நூற்றுக்கு 30 வீத சுங்க வரியையும், நூற்றுக்கு 2 வீத தேசத்தைக் கட்டியேழுப்பும் வரியும் என்ற அடிப்படையில் வரி அறவிட உத்தேசித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் வரியை குறைத்தனால் இந்நாட்டிலுள்ள பெண்களின் நூற்றுக்கு 4.2 வீத பெண்களுக்கு நலவு கிட்டியது.இந்நாட்டில் மொத்த பெண்கள் தொகையில் நூற்றுக்கு 32 வீதமானோரே ஆரோக்கிய துவாய் பயன்படுத்துகின்றனர்.மிகுதிப் பெண்கள் சுகாதாரப் பாதுகாப்பற்ற பாராம்பரிய முறையில் ஆடைத்துண்டுகளையே பயன்படுத்துகிறார்கள் என்பதை வருத்தத்துடனேயானாலும் கூற வேண்டும்.நாங்கள் இதை வெளிப்படையாக பேச வெட்க்கப்பட்டாலும் இது தான் உன்மை என்பதை வரிய பெண் மக்கள் அறிவார்கள்.கொழும்பு 7 இலுள்ள பெண்களுக்கு இதன் பாதுகப்புத் தேவை தெரியாவிடினும் கிராமங்களிலுள்ள பெண்களுக்கு தெரியும்.சகல பெண்களும் கொள்வனவு செய்யக்கூடிய விதத்தில் இதற்கான கொள்வனவுச் சூழலை ஏற்படித்திக் கொடுப்பது மானிட சமூகத்தின் பொறுப்பாகும்.நான் ஒரு ஆசிரியராக எனது அநுபவத்தில் இந்நாட்டிலுள்ள பாடசாலைப் பெண் பிள்ளைகளில் நூற்றுக்கு 50 க்கும் 60 க்குமிடைப்பட்ட் மாணவிகள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள நாட்களில் முறையாக பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை.
காரணம், ஆரோக்கிய துவாயைப் பெற்றுக்கொள்ள முடியாத குடும்பங்களின் நிலையாலாகும்.பெண்களின் இயற்கைச் சுழற்ச்சியால் ஏற்படும் மாதவிடாய் காரணம் மட்டுமல்ல உடல் ரீதியாக, மானசீக ரீதியாக, வயோதிபத்தின் காரணமாக ஆரோக்கிய துவாய் பாவிக்கிறவர்கள்.
இருக்கிறார்கள் ஆகையால் தான் ஆரோக்கிய துவாய் பெண்களுக்கு மேலதிக ஆடம்பர பொருளல்ல என்பதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்,மாத்திரமல்லாது இதற்காக உத்தேசித்துள்ள வரியை நீக்கமாறு கூறுகிறேன்.ஸ்கொட்லாந்து தமது நாட்டு பெண்களுக்கு வரி, விலை நீங்களாக இலவசமாக ஆரோக்கிய துவாய்களை வழங்க முன்வந்து வரலாற்றில் இடம் பிடிக்கும் போது நமது நாட்டு பெண் பாராளுமன்ற அங்கத்தவர் இது பற்றி பேச அவசியமில்லை எங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று கருத்துத் தெரிவிக்கின்றார்.தேசிய உற்ப்பத்திக்கு முதன்மை கொடுப்பதாக இறக்குமதி ஆரோக்கிய துவாய்க்கு வரி அறவிடுவதாக இருந்தால் உள்நாட்டில் இதற்கான போட்டித்தன்மை இருக்க வேண்டும். அப்போது தான் பொருட்களின் தரம் உயரும். அதே போன்று அனைத்துக்கும் தேசிய பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு என்று கூறிக் கொண்டு சகலதையும் அதனோடு தொடர்பு படுத்த முயன்றாலும், பெண்களின் மாதவிடாய் சுழற்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது என்பதை நாட்டை ஆளுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.